Showing posts with label கால்களும் இறக்கைகளும். Show all posts
Showing posts with label கால்களும் இறக்கைகளும். Show all posts

Friday, July 15, 2011

கால்களும் இறக்கைகளும்

ஒரு சின்னஞ்சிறுவன்
தொலைதூர வானில்
சூரியனை ஒட்டிப் பறக்கும்
பறவையை
அண்ணாந்து வியந்து
தன் குட்டிக்கைகளை விரித்து
அசைத்துப் பார்த்துக்கொண்டான்...

அங்கே - வானில்
புதிய சிறகுகளை
விரித்துப் பறந்த
பறவைக் குஞ்சு
பூமியில் ஒட்டிக்கொண்டு நகரும்
மனிதனை
விழிவிரிய நோக்கி
தன் பிஞ்சுக் கால்களை
காற்றில் நீட்டி
ஊன்ற முயன்றது...

-பிரகாஷ்.